[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 28 Jan, 2019 09:30 am
  • அ+ அ-

மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பேச்சில் நிதானம் தேவை.
**
ரிஷபம்: குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவரின் உதவியை நாடுவீர்கள்.
**
மிதுனம்: மனதில் உற்சாகம், புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
**
கடகம்: எதிர்பார்த்த சில காரியங்கள் தள்ளிப்போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். ஆன்மிக நாட்டம் கூடும்.
**
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் நம்பிக்கை, உற்சாகம் வெளிப்படும். இழுபறியாக இருக்கும் சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.
**
கன்னி: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
**
துலாம்: சிக்கலான, சவாலான காரியங்களாக கையில் எடுக்காதீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.
**
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. பணவரவு, பொருள் வரவு உண்டு.
**
தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவரின் மனநிலையை உணர்ந்து பேசுவீர்கள். காணாமல்போன முக்கிய ஆவணம் திரும்பக் கிடைக்கும். எதிலும் பொறுமை அவசியம்.
**
மகரம்: உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்வார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து உறவாடுவார்கள்.
**
கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களுடன் நட்பு மலரும். மனதில் நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும்.
**
மீனம்: பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிறரிடம் கைமாற்று வாங்கவேண்டி வரும். எதிர்பாராத வேலை முடியும். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்காதீர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close