[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 27 Jan, 2019 09:34 am
  • அ+ அ-

மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

ரிஷபம்: பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.

கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

கன்னி: சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பம் நீங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: வேலைச் சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யாரை நம்புவது என்கிற குழப்பம் ஏற்படும் முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.

தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

மகரம்: கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழிகளை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினர் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாகும்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close