[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 26 Jan, 2019 08:42 am
  • அ+ அ-

மேஷம்: இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.

ரிஷபம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். திருமண காரியங்கள் கூடிவரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மிதுனம்: கடந்த காலத்தில் நடந்த இனிமையான நிகழ்வுகளை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் கருத்துமோதல் வரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

கடகம்: பிரச்சினைகளை வெற்றி கொள்ள வழி கிடைக்கும். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகம் தெம்பைக் கொடுக்கும். பணவரவு உண்டு.

சிம்மம்: கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். நீண்டகாலமாக விலகியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு.

கன்னி: மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

துலாம்: தவிர்க்க முடியாத செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். சகோதரர் வகையில் அன்புத் தொல்லை அதிகமாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத லாபம் வரும். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

தனுசு:  சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீட்டு சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மகரம்: தன்னம்பிக்கை பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். யோகா, தியானத்தில் மனதைச் செலுத்துங்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.

கும்பம்: இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்கள் பலம், பலவீனத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படுங்கள்.

மீனம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close