[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 09:49 am
  • அ+ அ-

மேஷம்: வாழ்க்கையின் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காகச்  செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சிம்மம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர்கள். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

கன்னி: பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். சிலர் உங்கள் பொறுமையை சோதிப்பார்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தலைவலி, உடல் அசதி ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்டநாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரை எதிர்பாராமல் சந்திப்பீர்கள்.

தனுசு: உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். பணவரவு உண்டு.

கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

மீனம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கல்யாண முயற்சி பலிதமாகும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close