[X] Close

இந்த வாரம் இப்படித்தான்! (ஜன 24 முதல் 30ம் தேதி வரை) துலாம் முதல் மீனம் வரை


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 24 Jan, 2019 09:19 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து தொடர்பான விஷயங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விடச் சற்று மந்தமாகவே இருக்கும். உத்தியோகத்தில்  முன்னேற்ற நிலை காணப்படும். குழப்பங்கள் நீங்கித் தெளிவு உண்டாகும். மேலிடத்திலிருந்த அழுத்தம் அகலும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கைத் துணை உங்களை அனுசரித்துச் செல்வார். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கும். கலைத் துறையினருக்கு வீடு,நிலம், வாகனங்கள் சேரும். அரசியல்வாதிகள் நல்ல பெயர் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி திசைகள்: மேற்கு, தென்மேற்கு நிறங்கள்: வெள்ளை எண்கள்: 6, 9பரிகாரம்: லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமையன்று அர்ச்சித்து வர பொருள் வரவு கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

*******************************************************************************************

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். பணவரவு திருப்திதரும். சமூக அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணத்தால் லாபம் உண்டு. புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். எதிர்ப்பு குறையும். தொழில், வியாபாரத்தில் இனிமை, புத்திசாலித்தனத்தால் முன்னேற்றம் பெறுவார்கள். புதிய வர்த்தக ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை இனிமையான பேச்சால் கவர்வீர்கள். எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். குடும்பத்தில் இறுக்கம் நீங்கும். சுபச் சம்பவங்கள் நிகழும். உறவினர்களின் உதவி கிடைக்கும். வழக்குகளைத் தள்ளிப்போட வேண்டாம். தீர்வுக்கான சூழல் வந்தால் ஒத்துழையுங்கள். பெண்களுக்கு, எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் இருக்கும். மாணவர்களுக்கு எதையும் பகுத்தறிந்து ஆலோசிக்கவும். விளையாட்டுப் போட்டிக்காக வெளியூர் செல்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன் திசைகள்: கிழக்கு, வடகிழக்கு நிறங்கள்: சிவப்பு,மஞ்சள் எண்கள்: 3, 9 பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் கிழமை எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும்.

****************************************************************************************

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். கூடுதல் சிரத்தையுடன் இருக்க வேண்டும். பணவரவு அதிகமாகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகளைத் தொடங்குவீர்கள். அலுவலக வேலைகள் பதற்றத்தைக் கொடுப்பதாக இருந்தாலும் நல்லபடியாக முடியும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவீர்கள். பெண்களுக்கு முட்டுக்கட்டைகள் நீங்கும். கலைத் துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தாங்கள் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். மாணவர்களுக்கு விரும்பியதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். கல்வி உபகரணங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு நிறங்கள்: ஆரஞ்சு,மஞ்சள் எண்கள்: 1, 3, 9 பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

****************************************************************************************

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்த சுணக்க நிலை மாறும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரவு கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து வரும் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். சொத்து, வீடு வாங்குவதற்குத் தடைகள் நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமெடுக்கும். வேலை விஷயமாக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு தடைபட்ட காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு எல்லா நன்மைகளும் தங்கு தடையின்றி கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான கவலை நீங்கும். உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி திசைகள்: தெற்கு, தென்கிழக்கு நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் எண்கள்: 3, 5, 6 பரிகாரம்: திங்கள்கிழமை விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி விநாயகர் அகவல் சொல்லி வாருங்கள். ****************************************************************************************

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சினைகளில் இழுபறியான நிலை காணப்படும். பஞ்சம அஷ்டமாதிபதி புதன் சஞ்சாரம் தெம்பும் மகிழ்ச்சியும் தரும். தொழில், வியாபாரத்தில் மந்தமான நிலை மாறும். வரவேண்டிய பணம் கைக்கு சரியான நேரத்தில் வந்து சேரும். போட்டிகளைச் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரிடும். நிதானத்துடன் செயல்பட வேண்டும். மேலிடம் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் மனைவிக்குள் சுமுகம் ஏற்படும். நீண்ட நாட்களாக நிலவி வந்த சுபகாரியத் தடைகள் அகலும். பெண்களுக்கு தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். கலைத் துறையினர் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி, சனிதிசைகள்: மேற்கு, தென்மேற்கு நிறங்கள்: நீலம்,மஞ்சள் எண்கள்: 2, 3, 6 பரிகாரம்: வியாழக்கிழமை அனுமனை வெற்றிலை மாலை சாற்றி வழிபட துன்பங்கள் விலகும். ****************************************************************************************

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீடு கட்டும் முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். புதிய சொத்துச் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். முடங்கிக் கிடந்த திட்டங்கள் வேகம் பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவான நிலையை எடுப்பார்கள். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்குவீர்கள். கணவன் மனைவிக்குள் மன வருத்தம் நீங்கும். பெண்களுக்கு நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். கலைத் துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் திசைகள்: வடக்கு, வடகிழக்கு நிறங்கள்: வெள்ளை,சிவப்பு எண்கள்: 1, 3, 9 பரிகாரம்:  மாரியம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடத் துன்பங்கள் விலகும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close