[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 24 Jan, 2019 09:06 am
  • அ+ அ-

மேஷம்: உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் பெருமையடைவீர்கள். இசை, நடனம் பயில அவர்களை ஊக்குவிப்பீர்கள்.

ரிஷபம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த வெளிநாட்டுப் பயணம் கூடி வரும். பரபரப்புடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். 

மிதுனம்: துரோகிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். உங்களின் தன்னடக்கத்தைக் கண்டு அனைவரும் பாராட்டுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்: பிரபலங்களின் அறிமுகமும் அவர்களிடம் இருந்து உதவிகளும் கிடைக்கும்.  இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் திடீரென முடியும். பணவரவு சரளமாக இருக்கும்.

சிம்மம்: மன உளைச்சல், பதற்றம், விரக்தி வந்துபோகும். முன்கோபத்தைக் குறையுங்கள். பிள்ளைகளின் உயர் கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

கன்னி: யாரையும் யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும்.

துலாம்: புதுப் பொழிவுடன் காணப்படுவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பாதியில் நின்றுபோன கட்டிட வேலைகளையெல்லாம் இனி விரைந்து முடிப்பீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய இனிமையான சம்பவங்கள் மனதில் அடிக்கடி நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

மகரம்: சின்ன வேலைகளைக் கூட பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

கும்பம்: தடை, தாமதங்கள் விலகும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். 

மீனம்: அரசு அதிகாரிகளின் துணையுடன் சில வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செலவு, அலைச்சலை ஏற்படுத்தினாலும் புதிய அனுபவம் கிடைக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close