[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 23 Jan, 2019 09:36 am
  • அ+ அ-

மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தைச் சேர்ந்த ஒருவர் தக்கசமயத்தில் உதவுவார்.

ரிஷபம்: வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. நல்ல நிறுவனத்தில் புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

மிதுனம்: எதிர்காலத்துக்கென சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த வீண் விவாதங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள்.

கடகம்: வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு உண்டு.

சிம்மம்: முக்கிய விஷயத்தில் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள்.

கன்னி: உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் ஏற்படக் கூடும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.

துலாம்: சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாகப் பேசி காரியங்களைச் சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்காகச் சில காரியங்களை ஏற்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள்.

தனுசு: இழுபறியாக இருந்த விஷயங்கள் முடியும். பண வரவு உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகரம்: முக்கியமான வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. குடும்பத்தில் சிறு வார்த்தைகள்கூட பெரிய தகராறில் போய் முடியக் கூடும். 

கும்பம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் முக்கியத் திருப்பம் ஏற்படும்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close