[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 21 Jan, 2019 22:54 pm
  • அ+ அ-

மேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துபோகும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.
**
ரிஷபம்: பணவரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவன் -மனைவிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள்.
**
மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் கூடும்.
**
கடகம்: திட்டமிட்டது ஒன்றாக, நடப்பது ஒன்றாக இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தம் அடைவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.
**
சிம்மம்: எளிதில் முடித்துவிடலாம் என்று நினைத்த காரியங்கள்கூட இழுபறியில் முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்வீர்கள். நண்பர்கள் உதாசீனப்படுத்துவார்கள்.
**
கன்னி: நீங்கள் எடுக்கும் புது முயற்சிகளுக்கு பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடன் பிரச்சினை சுமுகமாகத் தீரும்.
**
துலாம்: மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். அடிக்கடி பழுதான வாகனம் சரியாகும். 
**
விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு இருக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதர வகையில் சுபச் செலவுகள் உண்டு. குடும்பத்துடன் வெளியூர் செல்வீர்கள்.
**
தனுசு: வேலைச்சுமை இருந்துகொண்டே இருக்கும். வாயுக் கோளாறால் அவதிப்படுவீர்கள். உணவுக் கட்டுப்பாடு அவசியம். திடீர் பயணத்தால் அலைச்சல், அசதி, செலவுகள் ஏற்படும்.
**
மகரம்: உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். சோர்வு, களைப்பு நீங்கும். வாகனப் பழுது சரியாகும். புது வாகனம் வாங்குவீர்கள். தாமதமான வங்கிக் கடனுதவிகள் கிடைக்கும்.
**
கும்பம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும்.
**
மீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கோபம் குறையும். முக்கிய நபர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close