[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 21 Jan, 2019 09:30 am
  • அ+ அ-

மேஷம் வீடு, மனை வாங்கும் யோசனை பிறக்கும். தாய் வழி உறவுகளால் மனக் கசப்புகள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல், அசதி, செலவு இருந்தாலும் ஆதாயமும் உண்டு. 
**
ரிஷபம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். தோல்வி பயம் நீங்கும். தக்க சமயத்தில் சகோதரி உதவுவார். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
**
மிதுனம்: குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த மனக் கசப்புகள் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். உடல்நலம் சீராகும். 
**
கடகம்: முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து வருந்துவீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும்.
**
சிம்மம்: உங்கள் கோபத்தால் நெடுநாள் நண்பரின் நட்பை இழக்க நேரிடும். பிரச்சினைகள், வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். அரசு காரியங்களில் சிறிய தடைகள் வந்து நீங்கும்.
**
கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து, அதற்கேற்ப செயல்படுவீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.
**
துலாம்: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். மகள் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். காரியத்தில் நிதானம் தேவை. 
**
விருச்சிகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். 
**
தனுசு: வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்தியை மீறி யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். எதிர்பாராத செலவால் திணறுவீர்கள். ஆன்மிக நாட்டம் உயரும். 
**
மகரம்: சமயோசித புத்தியால் பல காரியங்களையும் சாதிப்பீர்கள். எதார்த்தமாக, சாதுர்யமாகப் பேசி அனைவர் மனதிலும் இடம்பிடிப்பீர்கள். பல வகையிலும் பணவரவு உயரும்.
**
கும்பம்: பழைய வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக உங்களை நெருங்கி வருவார்கள்.
**
மீனம்: முன்கோபம் நீங்கும். உற்சாகம், நம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் நலனின் அதிக அக்கறை காட்டுவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close