[X] Close

வழி விடுவான் வடிவேலன்!


vazhividu-murugan

முருகப்பெருமான்

  • வி.ராம்ஜி
  • Posted: 20 Jan, 2019 17:29 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

 ரயில் நிலையம் அருகில் இருந்தபடி வாழ்த்தி ஆசி புரிவதுடன், பயணங்களில் பக்தர்களுக்கு பாதுகாவலனாகவும் இருந்து, வெற்றியைத் தந்து அருள்கிறார் திருச்சி- ரயில்வே ஜங்ஷன் அருகில் கோயில் கொண்டிருக்கும் வழிவிடு முருகன்!

ஜங்ஷன் ரவுண்டானாவுக்கு அருகில் அமைந்துள்ளது வழிவிடு வேல் முருகன் கோயில்.

 ராமேஸ்வரம் கடலில் இருந்து கரை ஒதுங்கிய அழகிய முருகப்பெருமானின் விக்கிரகத்தை, இங்கே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பி வழிபடத் துவங்கினார்கள்.

திருச்சிக்கு வந்து தமிழகத்தின் எந்த ஊருக்குச் செல்பவர்களாக இருக்கட்டும். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக பயணிக்கும் பக்தர்களாகட்டும்... அனைவரின் பயணத்திலும் பக்கத் துணையாக இருந்து, அவர்களுக்கு நல்வழி காட்டி அருள்கிறார் இந்த முருகன் என சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்!

கார்த்திகை மாதத்தில் வெளியூரில் இருந்து கார் மற்றும் வேன்களில் வரும் ஐயப்ப பக்தர்கள், முருகப் பெருமானை வழிபட்டு இங்கேயே தங்கி, கிளம்பிச் செல்கின்றனர். அப்படிச் சென்றால், முருகனின் அருளும் ஐயப்ப ஸ்வாமியின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

தைப்பூச நன்னாள், வளர்பிறை சஷ்டி, வாரந்தோறும் செவ்வாய்கிழமை ஆகிய நாட்களில் முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், எதிரிகள்  தொல்லையில் இருந்து விடுபடலாம்; தொழில் சிறக்கும்; வியாபாரத்தில் லாபம் கொழிக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

மேலும் புதிதாக பைக் மற்றும் கார் என எந்த வாகனம் வாங்கினாலும் அதன் சாவியை முருகனின் திருப்பாதத்தில் வைத்து பூஜித்து எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் பக்தர்கள்.

வழிவிடு முருகனை மனதார நினைத்து வேண்டுங்கள். வாழ்க்கையில், வழிக்குத் துணையாக வருவான் வடிவேலன்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close