[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 20 Jan, 2019 09:22 am
  • அ+ அ-

மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். பண வரவு உண்டு.

மிதுனம்: விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் இழுத்தடிப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

கடகம்: காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டியது வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். 

சிம்மம்: தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். எதிர்காலத்துக்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

கன்னி: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். உங்களின் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

துலாம்: இழுபறியாக இருந்துவரும் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

தனுசு: கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். புதிய நண்பரால் உற்சாகமடைவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

மகரம்: உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. 

கும்பம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் எனக் கண்டறிவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள்

மீனம்: கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரித்தாலும் அதற்கேற்ப செலவும் கூடும்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close