[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 18 Jan, 2019 09:16 am
  • அ+ அ-

மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். 

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சொந்தபந்தங்களுக்காக சில உதவிகளைச் செய்வீர்கள்.

சிம்மம்: புகழ், கவுரவம் உயரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திப்பீர்கள். பிரபலமான ஒருவரால் ஆதாயம் கிடைக்கும். சுபச்செலவுகள் அடுத்தடுத்து வரும். 

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. பணப்புழக்கம் சரளமாக இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். 

துலாம்: யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். தடைபட்ட திருமணம் நல்ல விதத்தில் நடைபெறும். புது வீடு, மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்தபந்தங்கள் உங்களைத் தேடி வருவார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும். 

மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களின் நீண்டநாள் கனவு நனைவாகும். விருந்தினர் வருகை உண்டு.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைபொருட்கள் சேரும்.

மீனம்: சகோதரர் வகையில் நன்மை உண்டு. பூர்வீகச் சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close