[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 17 Jan, 2019 09:13 am
  • அ+ அ-

மேஷம்: கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அநாவசியச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவத்தைப் பற்றி விவாதிக்காதீர்கள். குடும்பத்தினர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழப்பீர்கள்.

மிதுனம்: காரியங்களை போராடி வெல்வீர்கள். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். திடீர் பயணம் உண்டு.

கடகம்: நீண்டநாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு குறையும். விருந்தினர் வருகை உண்டு.

சிம்மம்: உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதையும் உற்சாகத்துடன் செய்யத் தொடங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பண வரவு உண்டு.

துலாம்: வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். சிலரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாரையும் முழுமையாக நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

விருச்சிகம்: தன்னம்பிக்கை பிறக்கும். உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு: தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மகரம்: பிரார்த்தனைகள் நிறைவேறும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நவீன மின்சாதனம் வாங்குவீர்கள்..

கும்பம்: எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும். கடனைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

மீனம்: கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுது நீங்கும்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close