[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 14 Jan, 2019 09:33 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தில் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். அநாவசியமாக அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம்: வாகன வகையில் வீண் அலைச்சல், செலவு ஏற்படும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். பேச்சில் நிதானம் தேவை.
மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மருத்துவச் செலவுகள் படிப்படியாக குறையும்.
கடகம்: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் கூடும். எதிரிகளின் கொட்டம் அடங்கும். விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்: அசதி, சோர்வு, கோபம் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடியும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
கன்னி: அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் குறைகூறக் கூடாது. கோபத்தால் பகை உண்டாகும். ஜாமீன் தருவது, சிபாரிசு செய்வது வேண்டாம்.
துலாம்: பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் நீங்கி நெருக்கம் கூடும். வீடு, வாகன வகையிலான செலவுகள் நீங்கும்.
விருச்சிகம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெளியூர் பயணத்தால் அலைச்சலோடு, ஆதாயமும் உண்டு. 
தனுசு: சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். பிரபலங்களின் நட்பால் ஆதாயம் கிடைக்கும்.
மகரம்: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு தருவார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
மீனம்: உற்சாகம் கூடும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனக் கசப்புகள் நீங்கி, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வீர்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close