[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 09:31 am
  • அ+ அ-

மேஷம்: அலைச்சல் அதிகம் இருக்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை பல்வேறு தடைகளைத் தாண்டி முடிப்பீர்கள். வெளியூர் பயணம் ஏற்படும்.

ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைப்படி சொத்துப் பிரச்சினைகளைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கடகம்: தாமதமாகிக் கொண்டிருந்த சில காரியங்கள் முழுமையடையும். சமூகத்தில் பிரபலமானவர்களின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும்.

சிம்மம்: வீண் அலைச்சல், பணத்தட்டுப்பாடு ஏற்படும். அரசு காரியங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படும். வீண்பழிக்கு ஆளாவீர்கள்.

கன்னி: பால்ய சிநேகிதர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளுக்கு புதிய ஆடை ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள்.

துலாம்: பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதர, சகோதரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கும். அரசியல் பிரமுகர் ஒருவரின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பால்ய சிநேகிதர்கள் தேடி வருவார்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவோடு பழகுங்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர் வகையில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். திடீர் பயணம் உண்டு.

கும்பம்: புது முயற்சிகள் வெற்றியடையும். நட்பு வட்டம் விரியும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு, பொறுமையுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் இணக்கமாகச் செல்லுங்கள். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close