[X] Close

ராமேஸ்வரத்தில் 30 புனித தீர்த்தக்குளங்கள் புதுப்பிப்பு; இன்று முதல் நீராடலாம்


rameswaram

ராமேஸ்வரம்

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Jan, 2019 09:18 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

ராமேஸ்வரத்தில் மேலும் 30 புனித தீர்த்தக் குளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அவற்றிலும் நீராடலாம். 

புனித பூமி என்றதும்... காசியம்பதி என்று போற்றப்படும் காசி மாநகரம் நினைவுக்கு வரும். வடக்கே உள்ள காசி மனதுக்குள் வரும்போதே, தெற்கில் உள்ள திருத்தலமும் நினைவுக்கு வரும். அந்தத் தலம்... ராமேஸ்வரம்!

ஸ்ரீராமபிரான் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட தலம் எனும் புராண - புராதனப் பெருமை கொண்ட பூமி இது.

பொதுவாகவே, திருத்தலங்களில் புண்ணிய தீர்த்தம் இருப்பது இயல்பானதுதான். அதனால்தான் தலம், தீர்த்தம், மூர்த்தம் எனும் சொல்லே வந்தது. ராமேஸ்வரத்திலும் புண்ணிய தீர்த்தம் உண்டு. சொல்லப் போனால், புண்ணிய தீர்த்தங்கள். இங்கே, மொத்தம் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

1964ம் ஆண்டுக்கு முன்பு வரை, ராமேஸ்வரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 62 புனித தீர்த்தக் குளங்கள் இருந்தனவாம். இதில், அந்த வருடத்தில், நிகழ்ந்த பெரும் புயலால் 30 தீர்த்தக்குளங்கள் சேதமாகின. இப்போது ரூ.5 கோடி செலவில், 30 தீர்த்தக்குளங்கள் புதுப்பிக்கப்பட்டன.

ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சி மடம் பகுதிகளில் உள்ள இந்த 30 தீர்த்தக் குளங்களிலும் இன்று முதல் புனித நீராடலாம். புதுப்பிக்கப்பட்ட தீர்த்தக்குளங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

வழக்கமாக தினமும் ராமேஸ்வரத்துக்கு ஏராளமான பக்தர்கள் வந்துகொண்டிருப்பார்கள். அதிலும் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை தருணங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தீர்த்த நீராடி, பித்ரு ஆராதனை செய்வார்க்ள்.

இந்த முறை தை அமாவாசை நன்னாளின் போது, இந்தக் கூட்டம் புதிய புனித தீர்த்த நீராடலால், இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close