[X] Close

சொந்த வீடு ஏக்கமா? குரு, சந்திர திசைகளில் நிறைவேறும்!


jodhidam-arivom-4

  • kamadenu
  • Posted: 11 Jan, 2019 09:34 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் (2) 4: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

குரு சந்திர யோகம் பற்றி பார்த்து வருகிறோம். 

குருபகவான் குருமங்கள யோகத்தில் தன் குணாதிசயத்தை ஒரு மாதிரியாகவும், குரு சந்திர யோகத்தில் வேறு மாதிரியாகவும் தன் பலனை வெளிப்படுத்துவதைக் கவனித்திருப்பீர்கள்.

குரு இரு ஏன் வேறாக செயல்பட வேண்டும்?

குருபகவான் பூரண சுபர் ஆவார் , அவர் யாருடன் அதாவது எந்த கிரகத்துடன் சேர்கிறாரோ .அந்த கிரகத்தின் பலன்களையும் தன் பலனையும் இணைத்துதான் தருவார். அதனால்தான் இந்த வித்தியாசம் உண்டாகிறது.

சரி... குரு சந்திர யோகத்தைப் பார்ப்போம்.

குருபகவானோடு சந்திரன் இணைந்திருந்தாலும் அல்லது குருவுக்கு சந்திரன் 5, 7, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் இந்த குரு சந்திர யோகம் உண்டாகும்.

இதன் பலன்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வாமா?

தெளிந்த சிந்தனை, தர்ம குணம், இரக்கம், உதவி செய்யும் மனப்பாங்கு. எவருக்கெல்லாம் இருக்கிறதோ.. அவருக்கு குருசந்திர யோகம் இருக்கிறது என்று அனுமானித்துக் கொள்ளலாம். ஏனென்றால், சிந்தனையில் தெளிவையும் தர்ம தயாள குணங்களையும் அடுத்தவருக்கு ஓடிப்போய் உதவி செய்யும் மனதையும் குரு சந்திர யோகம் தந்தருளும் தன்மை கொண்டது!

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு, சமூகத்தில் நற்பெயர்,  பெற வேண்டுமாயின் முதலில் அவருக்குத் தேவை தெளிந்த சிந்தனை.

 நல்லது கெட்டது சீர் தூக்கிப் பார்க்கும் தெளிவான அறிவுதான் சிறந்த முடிவுகளை எடுக்க வைக்கும். அந்த வகையில் இந்த  குரு சந்திர யோகம் துணைபுரியும்.

தர்ம குணம், இரக்க குணம் இருக்கும் இடத்தில் இறைவன் வாசம் செய்வான். எனவே இந்த குரு சந்திர யோகம் இருப்பவர்களுக்கு இறைசக்தியானது எப்போதும் உடனிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ‘அவனுக்கு தெய்வபலம் இருக்குப்பா’ என்று சொல்லுகிறோமே... அது இதுதான்... இப்படித்தான்!

உள்ளம் நேர்த்தி மட்டுமல்ல  உடை நேர்த்தி  உடையவர்கள், இந்த       குருசந்திர யோககாரர்கள். ஒரு மனிதனை மதிப்பீடு செய்வதில் முதன்மையானது உடை. அடுத்தது முகம். அதன் பிறகே கல்வித் தகுதி மற்றும் இத்யாதிகள்.  

இந்த உடை மற்றும் முகப்பொலிவு, இந்த இரண்டுக்கும் மிக முக்கியமானவர்கள் குருவும் சந்திரனும்.

சந்திரன் = முகம்

அந்த முகத்தில் தேஜஸ்= குரு

உடை= சந்திரன்

அந்த உடையின் நேர்த்தி= குரு

ஆக இந்த " குரு சந்திர யோகம்" உடையவர்கள் இயல்பாகவே கம்பீரமான கவர்ச்சியான தோற்றம் உடையவர்களாகவே இருப்பார்கள்.

இந்த தோற்றமே இவர்களுக்கு கூடுதல் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தரும்.

இது மட்டுமல்ல தன்னுடைய நேர்த்தி மட்டுமல்ல தன் சுற்றுப்புறத்தையும் அதாவது தன் வீடு, அலுவலகம், செய்தொழில், என அனைத்தும் கச்சிதமான நேர்த்தியுடன்   பராமரிப்பார்கள். கிட்டத்தட்ட, இவர்களை பர்பெக்‌ஷனிஸ்ட் என்று சொல்லலாம்.

தாயாரிடம் அளவு கடந்த பாசம் வைப்பவர்கள், தாயாரின் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பவர்கள் , அதன் மூலம் வாழ்க்கையில் முன்னுக்கு வருவார்கள்.

அதேபோல எந்த பிரச்சினை வந்தாலும் அதன் பாதிப்பை உணரக்கூட மாட்டார்கள். அதாவது பிரச்சினை,  அந்த பிரச்சினையின் தாக்கம்  எதுவும் தன்னை பாதிக்காதவாறு இயல்பாக கடந்து செல்பவர்கள். அதாவது அந்த பிரச்சினையை எளிதில் தீர்த்து கடந்து செல்பவர்கள்.

மேலும் யார் மனதையும் புண்படுத்தாத குணம் உடையவர்கள். குறைகளை நாகரீகமாக சுட்டிக் காட்டுபவர்கள். இன்னும் சொல்லப்போனால் சகஜமான நகைச்சுவையோடு பேசியே காரியம் சாதிப்பவர்கள்.

இயல்பாகவே வீடு வாகன யோகம் உடையவர்கள். இதுவரை வீடு இல்லாதவர்கள், சந்திர திசை தருணத்திலோ, குரு திசை வேளையிலோ வீடு முதலான சந்தானங்களை கிடைக்கப் பெறுவது உறுதி!

கலைத்துறை அல்லது கலையார்வம் உடையவர்களாகவே இருப்பார்கள். அல்லது கட்டிடக்கலை, வீட்டு உட்புற வடிவமைப்பாளர் (interior decoratoar) ஆடை வடிவமைப்பாளர் (fashion designer) போன்ற துறைகளில் பெரும் புகழ் பெறுவார்கள்.

இவற்றுக்கெல்லாம் மேலாக ஆலயமும் ஆன்மிகமும் இவர்களுக்கு பக்கத்துணையாக இருக்கும்.

அது எப்படி ?

அடுத்த தொடரில் பார்க்கலாம்.

- அறிவோம்

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close