[X] Close

இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் – ஜனவரி 10 முதல் ஜனவரி 16 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


indha-vaaram-ungalukku-ippadithan

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 05:40 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் கடினமான வேலைகளையும் சுறுசுறுப்பாகவும் ஆர்வமாகவும் செய்வீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் நிதானத்தைக் கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரம் வலுவாக நடக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். உத்தியோகத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவது நன்மை தரும். உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். பெண்களுக்கு, தேவையான விஷயங்கள் கை கூடி வரும். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகள், தொண்டர்கள் விசயத்தில் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு, படிப்பில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்:வெள்ளை, பச்சை, மஞ்சள்

எண்கள்: 2, 3, 9

பரிகாரம்: தினமும் கந்தர் அனுபூதி சொல்லி சுப்பிரமணியரை வணங்கி வாருங்கள்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தேவையான பணவரவு இருக்கும். மனத்தில் ஏதாவது கவலை அரித்துக் கொண்டே இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பிறரிடம் பேசும் போது கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

குழந்தைகளால் நிம்மதி உண்டு. உறவினர்கள், நண்பர்களிடம் கசப்பு நீங்கி, உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இருக்கும். பெண்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்துக் கவலைப்பட வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு மற்றவர்களிடம் எதிர்பார்த்த பாராட்டுகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறிய விஷயத்துக்குக் கூட மற்றவரிடம் உதவியை எதிர்பார்க்க வேண்டி வரும். எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்விச்சுற்றுலாவுக்குச் சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: மஞ்சள்,வெளிர்நீலம்

எண்கள்: 4, 6

பரிகாரம்: துர்கை அம்மனை ராகு காலங்களில் வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் வியாபாரத்தில் நெருக்கடி நிலை காணப்படும். தூர தேசப் பயணங்களால் வெற்றி உண்டாகும். பணப்புழக்கம் திருப்தியாக இருக்கும். தொழில், வியாபாரம் திடமாக இருக்கும்.உத்தியோகத்தில் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து இதமாகப் பேச வேண்டும்.

பிள்ளைகள் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளைப் பத்திரமாகப் பாதுகாக்கவும். பெண்களுக்கு எந்த விசயத்திலும் நெருக்கடியான நிலையைச் சமாளிக்க முடியும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். அரசியல்வாதிகள் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிக்க ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வெளியூர் செல்லலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு

எண்கள்: 2, 5

பரிகாரம்: நடராஜருக்கு அபிஷேகம் செய்து அர்ச்சித்து வாருங்கள்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் உடல் சோர்வு ஏற்படும். கவலைகள் இருந்த இடம் தெரியாமல் போகும்.திட்டமிட்டுச் செயலாற்றுவீர்கள். வேலைகளில் பின்னடைவு வரலாம். ஆன்மிக  நாட்டம் அதிகரிக்கும். திருமண விசயங்களில் இருந்து வந்த தடங்கல்கள் அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். தொழில் அமோகமாக நடக்கும். பழைய தொழிலில் தொய்வு நிலை மாறும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் வேலையை இலகுவாக்க முயற்சி செய்வார்கள். மேலதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காண்பார்கள். கவனமாக இருப்பது நல்லது.

சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் படிப்பில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு காரியங்களில் வெற்றி ஏற்படும். அரசியல்வாதிகள் முன்னேற்றமடைய மேலிடத்தின் உதவியை எதிர்பார்க்கலாம். கலைத் துறையினர் வெற்றி வாகை சூடுவதற்கு ஏற்ற சூழ்நிலை வரும்.மாணவர்களுக்கு மெத்தனப் போக்கு மாறி நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட ஏற்ற நேரமாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், சனி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை,வெளிர்பச்சை

எண்கள்: 2, 5

பரிகாரம்: அம்மனை வணங்கி வர பிரச்சினைகள் சுமுகமாக தீரும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் சோதனைகளைச் சந்திக்க வேண்டிய நேரமாக இருப்பதால் பொறுமையாகக் காரியமாற்றுங்கள். நீங்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு தனித்தன்மையுடன் செயலாற்றுவீர்கள். உடல்நிலை முன்னேற்றம் பெறுவதற்கு குல தெய்வப் பிரார்த்தனைகளைச் செய்து வாருங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாகச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வருவாய் நன்றாக இருக்கும். அலுவலக ரீதியாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரலாம். இடமாற்றம் உண்டாகலாம்.

வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்குள் பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். விருப்பம் இல்லாத காரியத்தில் ஈடுபட  வேண்டி இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் காரியங்கள் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான பிரச்சினைகளில் இருந்த தொய்வு நிலை மாறும். கலைத் துறையினருக்கு விரும்பிய இடத்தில் வாய்ப்பு கிடைக்கப் போராட வேண்டி வரலாம்.  மாணவர்களுக்கு, கல்வியில் நாட்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு

நிறங்கள்: வெள்ளை,மஞ்சள்

எண்கள்: 1, 2, 8

பரிகாரம்: சிவாலயம் ஒன்றுக்குச் சென்று நமசிவாய மந்திரத்தை 108முறை சொல்லி வழிபடவும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் சில நெருக்கடியான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரலாம். திருப்தியாக பணவரவு இருக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றப் பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மீது இரக்கம் காட்டுவீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தொழிலில் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் கூடும். 

உடனிருப்பவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களிடம் மதிப்பும், மரியாதையும் கூடும். சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்து சுற்றுலா செல்வீர்கள்.அரசியல்வாதிகள் மேலிடத்தில் சிபாரிசுக்காகச் செல்வீர்கள். கலைத் துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு, மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். பெற்றோரின் ஊக்கம் இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை,மஞ்சள்

எண்கள்: 3, 5

பரிகாரம்: புதன்கிழமை பெருமாளுக்கு தயிர் சாதம் நிவேதனம் செய்யுங்கள்.வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close