[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 05:23 am
  • அ+ அ-

மேஷம்: வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

ரிஷபம்: மன உளைச்சல், குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மிதுனம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சவாலான காரியங்களையும் முடிப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கும். வேற்று மதத்தினரால் நன்மை கிட்டும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். 

கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் மற்றவருக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராடுவீர்கள்

சிம்மம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும்.

கன்னி: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். 

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்துவந்த தேக்க நிலை மாறும். திடீர் பயணம் ஏற்படும்.  

விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்படக் கூடும். புது வீடு, மனை, வாகனம் வாங்க யோசிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வாகனம் செலவு வைக்கும்.

மகரம்: காரியங்களை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். பண வரவு உண்டு.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். நெருங்கியவரிடம் மனக் குறைகளைச் சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

மீனம்: பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். உடல்நலத்தில் கவனம் தேவை. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close