[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


today-rasipalan

  • kamadenu
  • Posted: 09 Jan, 2019 08:57 am
  • அ+ அ-

மேஷம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். பயணம் உண்டு.

மிதுனம்: எதிலும் அவசரப்பட வேண்டாம். சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவு உண்டு.

கடகம்: கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். யாருக்காகவும் உங்களின் சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.

சிம்மம்: சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள் கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு மறையும்.. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும்.

துலாம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். பண வரவு அதிகரிக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: கல்யாணப் பேச்சுவார்த்தை நம்பிக்கை தருவதாக இருக்கும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை நிலவும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

தனுசு: ஆரவாரமின்றி வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.

மகரம்: மன உளைச்சல் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது. கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். 

கும்பம்: சில வேலைகளை உங்கள் மேற்பார்வையில் முடிப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத சலசலப்பு வந்து நீங்கும். யாரையும் மனம் நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

மீனம்: செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். பண வரவு உண்டு. 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close