[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 08 Jan, 2019 08:51 am
  • அ+ அ-

மேஷம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்

ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். கடனாகக் கொடுத்த பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உங்களின் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். 

மிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர் பயணம் ஏற்படும்.

கடகம்: புது வாகனம் வாங்குவீர்கள். வரவேண்டிய தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். அரசியலில் பிரபலமானவர்களுடன் நட்பு ஏற்படும். விருந்தினர் வருகை உண்டு.

கன்னி: உறவினர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

துலாம்: அடிக்கடி தொல்லை கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். கடனாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பிறக்கும்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களைக் கூட சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை பளிச்சிடும். முக்கியப் பிரமுகர்களால் பாராட்டப்படுவீர்கள். 

தனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். சொந்தபந்தங்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

மகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களை ஒதுக்குவீர்கள். இடம், பொருள் ஏவலறிந்து பேசுங்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: வறட்டு கவுரவத்துக்காக அநாவசியச் செலவுகளைச் செய்து சேமிப்புகளைக் கரைக்காதீர்கள். வேலைச்சுமை, திடீர் பயணம் வந்து போகும். கடன் பிரச்சினை அதிகமாகும். 

மீனம்: நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close