[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


how-is-ur-day

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 08:57 am
  • அ+ அ-

மேஷம்: போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

ரிஷபம்: பேச்சுத் திறமையால் காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல்நலம் சீராகும். 

மிதுனம்: ஒரே நாளில் பல முக்கிய வேலைகளை பார்க்கவேண்டி வரும். குடும்பத்தினரைப் பற்றி வெளி நபர்களிடம் விமர்சிக்க வேண்டாம். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடக் கூடாது.

கடகம்: கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவாக யோசித்து முடிவு எடுப்பீர்கள். 

சிம்மம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி: குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் நீண்டநாள் ஆசைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன வகையில் ஆதாயம் உண்டு.

துலாம்: நீண்ட நாளாக மனதில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

விருச்சிகம்: சோம்பல், உடல் அசதி நீங்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

தனுசு: வீண் செலவுகளைத் தவிர்த்து எளிமையாக வாழ்க்கை நடத்துவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

மகரம்: முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாக செய்து முடிப்பது நல்லது. அடுத்தவர்களை குறை கூறாமல், உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம்: பிள்ளைகளால் படபடப்பு, டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் தராமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். விரும்பிய பொருட்கள், ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close