[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 06 Jan, 2019 09:37 am
  • அ+ அ-

மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் விவாதித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் முதல் மரியாதை கிடைக்கும். 

கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம், ஆதாயம் உண்டு.

சிம்மம்: பிள்ளைகளின் செயல்களைப் பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.

துலாம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். மனநிறைவுடன் சில காரியங்களைச் செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

தனுசு: வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். நண்பர்கள், உறவினர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும்.

மகரம்: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கடனைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

கும்பம்: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும்..

மீனம்: விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close