[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 05 Jan, 2019 09:22 am
  • அ+ அ-

மேஷம்: தடைபட்டிருந்த காரியங்களெல்லாம் மளமளவென்று நிறைவேறும். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டு.

கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டம் விரியும். கடன் பிரச்சினைகளைத் தீர்க்க மாற்றுவழிகளைக் காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். 

துலாம்: மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காகச் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: பழைய நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள்.

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு உண்டு.

கும்பம்: திட்டமிட்டக் காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்: வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சிப்பீர்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close