[X] Close

அமாவாசை தர்ப்பணம்; முன்னோர் வழிபாடு மறக்காதீங்க!


amavasai

தர்ப்பணம் - முன்னோர் வழிபாடு

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Jan, 2019 21:55 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

மார்கழி மாதத்தின் அமாவாசை தினம் (5.1.19). எனவே நாளைய தினம் அமாவாசை தர்ப்பணம் செய்ய மறக்காதீர்கள். இறந்து போன முன்னோர்களை நினைத்து, நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வம்சம் தழைக்கும், சந்ததி சிறக்கும் என்பது உறுதி. 

முன்னோர்களை ஆராதிக்கும் விதமாக, வருடந்தோறும் அவர்கள் இறந்த திதியில், திவசம் எனும் சடங்குகள் செய்து, முன்னோரை வணங்குவோம். இன்னும் சிலர், மாதந்தோறும் அமாவாசையில் தர்ப்பணம் செய்வார்கள்.

ஆனால் வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யச் சொல்கிறது சாஸ்திரம் என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். 

எந்த நிலை வந்தாலும், எந்தச் சூழல் ஏற்பட்டாலும் தர்ப்பண காரியங்களை சிரத்தையுடன் செய்யச் செய்ய... அவை பன்மடங்கு பலனாக நம் பிள்ளைகளுக்குப் போய்ச்சேரும் என்கிறார். நம் சந்ததியினருக்கு வங்கி டெபாசிட் போல், நாம் சேர்த்து வைக்கும் சொத்துகள் இவைதான் என தர்ப்பண காரியங்கள் குறித்து வலியுறுத்துகிறார்கள்.

மாதந்தோறும் அமாவாசை நாளிலும் தமிழ் மாதப் பிறப்பின் போதும் தர்ப்பணம் செய்து, பித்ருக்களை ஆராதிக்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். 5.1.19 சனிக்கிழமை அமாவாசை. 

 சனிக்கிழமை அமாவாசை வருவது கூடுதல் விசேஷம். எனவே அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய மறக்காதீர்கள். முன்னோர்களை ஆராதிக்கும் விதமாக தர்ப்பணம் கொடுப்பதால், .அதில் முன்னோர்கள் குளிர்ந்து ஆசீர்வதிக்கிறார்கள் என்பது ஐதீகம். வீட்டின் தரித்திரம் விலகும். தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை. 

முடிந்தால், இயலாதோருக்கு உடையோ உணவோ வழங்கி உதவுங்கள். நீங்கள் செய்யும் காரியத்தால் குளிர்ந்து போய், பித்ருக்கள் பூரணமாக உங்களையும் உங்கள் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பார்கள்  என்பது உறுதி. 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close