[X] Close

அனுமனின் அருளைப் பெற எளிய வழி தெரியுமா?


hanuman

ஆஞ்சநேயர்

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Jan, 2019 19:26 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

அனுமனின்  அருளைப் பெற்றால், மனதிலும் உடலிலும் திடம் பெறலாம். வாழ்வில் திறம்பட வாழலாம் . இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியுண்டாகி, வாழ்விலும் வெளிச்சத்தைத் தந்தருள்வார் ஆஞ்சநேயர். அனுமனின் அருளைப் பெறுவதற்கு எளிய வழி ஒன்று என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஜெய் அனுமன் ஜெய் அனுமன் என்று பக்தர்களாகிய நாம் சொல்லுவோம். ஆனால் இதிலெல்லாம் அவர் மனம் குளிராதாம். உடனே மகிழ்ந்துவிடமாட்டாராம்.

அப்புறம்..?

தன்னை ஒரு மகாசக்தியாக ஒருபோதும் நினைத்துக்கொண்டதில்லை அனுமன். தன்னை ராமபக்தனாகத்தான் நினைத்து உருகுவார். ராமபிரானின் பக்தன் என்று சொல்லிக்கொள்வதில் அப்படியொரு ஆனந்தம் அவருக்கு. எப்போதும் உள்ளே ராமநாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பாராம்.

எனவே, அனுமனை வழிபடும் போதெல்லாம் ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்று சொல்லிக்கொண்டே இருங்கள். முடிந்த போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருங்கள். சனிக்கிழமைகளில் காலையில் எழுந்து நீராடியதும், பூஜையறையில் அமர்ந்து, கண்கள் மூடி  சிறிது நேரம் சொல்லிவிட்டு, அனுமனை நமஸ்கரியுங்கள்.

நாளை அனுமன் ஜயந்தி (5.1.19). குறிப்பாக, இந்த நாளில், அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று, அவரை கண்ணார தரிசித்து, மனதார பிரார்த்தனை செய்யுங்கள். ’ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்று சொல்லுங்கள்.

இனி உங்கள் வாழ்வின் எல்லா தருணங்களிலும் அவர் உங்களை வழிநடத்தி அருள்வார். வழிகாட்டியாக இருந்து பக்கத்துணையாக இருப்பார் என்பது உறுதி.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close