[X] Close

சனியை பார்த்து இனி பயம் வேணாம்; அனுமன் இருக்க பயமேன்!


sani-hanuman

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Jan, 2019 18:47 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

அனுமனை வணங்கி வந்தால், சனீஸ்வரரைக் கண்டு பயப்படத்தேவையில்லை. எனவே அனுமன் வழிபாட்டை மறக்காமல்  செய்யுங்கள். அனுமன் ஜயந்தியில் (5.1.19) துளசி மாலை சார்த்தி அனுமனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். மனோபலம் பெருகும். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும்!  

  சரி... சனீஸ்வரர் பயமில்லையா? என்ன காரணம்?

இலங்கைப் போரின்போது, இந்திரஜித்தின் அஸ்திரத்தால் மயங்கி வீழ்ந்து உயிருக்குப் போராடிய லட்சுமணனையும் வானர சேனைகளையும் காப்பாற்றினார் ஆஞ்சநேயர்.

அதெப்படி என்பதுதான் தெரியுமே!

அதாவது,  அனுமன் சஞ்ஜீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்தார். அப்போது, ராவணனின் ஆணைக்கு இணங்க, அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்த சனி பகவான், அனுமனைத் தடுத்து நிறுத்த முற்பட்டார்.

   தன்னை வழிமறித்த சனியிடம், ‘‘போர்க்களத்தில் மலையைச் சேர்த்து விட்டுத் திரும்பும்போது நாம் பலப்பரீட்சை செய்யலாம். இப்போது வேண்டாம்’’ என்றாராம் அனுமன்.

ஆனால் சனி பகவான், அனுமனின் வேண்டுகோளை ஏற்கவில்லை. ஆவேசத்துடன் அனுமன் மீது பாய்ந்தார். இதனால் கோபம் கொண்ட அனுமன், சனியைத் தன் காலில் சுற்றிக் கட்டிக்கொண்டு போர்க்களத்தை நோக்கிப் பறந்தாராம். பிறகு, அவர் மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வந்து, சனி பகவானுக்கு விமோசனம் தந்ததாகச் சொல்கிறது புராணம்.

 விமோசனம் பெற்ற சனிபகவான், ‘இனி தங்களை வணங்கும் அடியார்க்கு என்னால் பாதிப்பு இருக்காது’ என்று வாக்கு தந்தாராம்.

  தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது ஹனுமந்தன்பட்டி. இங்கே, கோயில் கொண்டிருக்கிறார் சனிபந்தன ஹனுமந்தராயப் பெருமாள். மிகுந்த வரப்பிரசாதி இவர்!

அனுமன் ஜயந்தி நன்னாளில், அதிலும் சனிக்கிழமையும் அனுமன் ஜயந்தியும் இணைந்து வரும் அற்புத வேளையில், அருகில் உள்ள அனுமன் கோயிலில் தரிசனம் செய்யுங்கள். துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், வெண்ணெய்க் காப்பு சார்த்தி வழிபடுங்கள். சனி பகவானிடம் இனி பயப்படத் தேவையில்லை.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close