[X] Close

சுந்தர காண்டம் படிப்போம்; சுபிட்சம் நிச்சயம்! அனுமன் ஜயந்தியில் பாராயணம் செய்வோம்!


hanuman-jayanthi

ஸ்ரீஅனுமன்

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Jan, 2019 12:14 pm
  • அ+ அ-

 வி.ராம்ஜி

   அனுமனே நமக்கு ஆபத்பாந்தவன். நாளை 5ம் தேதி அனுமன்  ஜயந்தித் திருநாள். சனிக்கிழமை நன்னாளும் ஹனுமன் ஜயந்தியும் ஒருசேர வருவது இன்னும் சிறப்பு. இந்த நாளில், அனுமனை வணங்குவோம். அவனருள் பெறுவோம். சுந்தரகாண்டம் பாராயணம் செய்து, அஞ்சனை மைந்தனைப் போற்றுவோம்.    

வீர தீரப்  பிரதாபங்களுக்கு பெயர் பெற்ற அனுமன், உலகை இயக்கும் பஞ்ச பூதங்களையும் வெற்றி கண்டவர் . பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன், பஞ்சபூதங்களில் ஒன்றான சமுத்திரத்தைத் தாண்டியவர், பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கமாக இலங்கையைச் சென்றடைந்தவர், பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமாதேவியின் மகளான சீதையைக் கண்டறிந்து ராமபிரானிடம் சொன்னவர், பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பால் இலங்கை தேசத்தை நடுநடுங்க, கிடுகிடுங்க வைத்தவர். எனவே பஞ்சபூதங்களுக்கு அப்பாற்பட்ட அனுமனை வணங்கினால், பஞ்சபூதங்களும் நம்மைக் காத்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். .

‘அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி

அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்’

பஞ்சபூதங்களையும் வென்றவர் என்பது ராமாயணத்தில் அனுமனுக்கு கிடைத்த பெருமை!  சுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட அனுமனைப் பற்றியும், அவரது பராக்கிரமங்களைப் பற்றியும் கூறுவது என்பதால், அந்தப் பகுதிக்கு ‘சுந்தர காண்டம்’ என்று பெயர். 

கலியுகத்தில் சகல தோஷங்களையும் களைந்தெறியும் வல்லமை, சுந்தர காண்ட பாராயணத்திற்கு உண்டு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close