[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 04 Jan, 2019 09:31 am
  • அ+ அ-

மேஷம்: அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு காணப்படும். செரிமானக் கோளாறு வந்து செல்லும். மாலை முதல் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும்.

ரிஷபம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

மிதுனம்: நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

கடகம்: எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலம், வலிமை உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்: எதையும் சாதித்து விடலாம் என்ற மனோதைரியம் வரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

கன்னி: உங்கள் கை ஓங்கும். மன உறுதி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய திட்டங்கள் உதயமாகும். பண வரவு திருப்தி தரும்.

துலாம்: தடைகள் பல வந்தாலும் தளராமல் சாதிக்க முற்படுவீர்கள். எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

விருச்சிகம்: உங்கள் திறமை மீது அவ்வப்போது சந்தேகம் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது நல்லது. 

தனுசு: மனஇறுக்கம் வந்து செல்லும். நீண்டதூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வழக்கு தொடர்பாக வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். பிரபலமானவர் அறிமுகமாவார். பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நண்பர்களாவார்கள். வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: திட்டமிட்டக் காரியம் கைகூடும். தொழிலதிபர்கள் அறிமுகமாவார்கள். தடை பட்டிருந்த வீடு கட்டும் வேலையை மீண்டும் தொடர்வீர்கள். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close