[X] Close

இந்த வாரம் இப்படித்தான்! (ஜன 3 முதல் 9 ம் தேதி வரை) துலாம் முதல் மீனம் வரை


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 10:40 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரலாம். பேச்சில் துடிப்பும் ஆற்றலும் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மையாக முடியும். வெளியூர்ப் பயணங்கள்  ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அதிக அளவில் லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் நன்மைகள் அதிகமாக நடக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் நன்மையில் முடியும். பெண்களுக்கு, சாதகமான சூழ்நிலை நிலவும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, வருவாய் அதிகரிக்கும். நிலுவைகள் வசூலாகும். புதிய அறிமுகங்களும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, தேவைப்படும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களுக்குத் தேவையான உதவிகளை எல்லாத் தடைகளையும் தாண்டி செய்வீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உடன் இருப்பவர்களால் அவ்வப்போது பிரச்சினைகள் வரலாம்.

 பரிகாரம்: குடும்பத்தில் நிம்மதியுடன் இருக்க தினமும் யோக நரசிம்மரை வழிபட வேண்டும். எண்கள்: 4, 5, 7.  நிறங்கள்: வெளிர் நீலம், ஆரஞ்சு.  திசைகள்: தென் மேற்கு, வடக்கு.  அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி. 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா விதமான நற்பலன்களும் உண்டாகும். பணவரவு அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும். உத்தியோகத்தில் நிலுவைப் பணம் கைக்கு வரும். மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு, புதிய நபர்களால் தொல்லைகள் ஏற்படலாம். கலைத் துறையினருக்கு, பேச்சில் இனிமையால் நன்மைகள் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு, தொண்டர்களால் பிரச்சினைகள் எழலாம். உடன் இருப்பவர்களால் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாகப் பணியாற்ற வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு, உடனிருப்பவர்களுடன் இருந்த போட்டிகள் விலகும்.

 பரிகாரம்: செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம்பழ விளக்கேற்ற வேண்டும். எண்கள்: 5, 9.  நிறங்கள்: சிவப்பு, பச்சை.  திசைகள்: தென்மேற்கு, வடக்கு. அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன். 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி காணப்படும். வாடிக்கையாளர்களிடம்  கவனமாகவும் சாந்தமாகவும் உரையாடுவது வியாபாரத்தை இனிதாக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் கோபத்தைத் தூண்டலாம். எளிமையால் மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுக்குச் சொந்தமான பொருள் ஒன்றை இழக்க நேரலாம். பெண்களுக்கு, மற்றவரின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மையைத் தரும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு, ஆசிரியர்களின் செயல்பாட்டில் திருப்தி ஏற்படும். கல்வியில் மகிழ்ச்சியுடனான ஈடுபாடு அதிகரிக்கும்.

 பரிகாரம்: செந்திலாண்டவரைத் தினமும் மனத்தில் துதியுங்கள். எண்கள்: 1, 3, 6.  நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு.  திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு.  அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன். 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் சுமாரான பலன்களையே எதிர்பார்க்க முடியும். திடீரென்று பண வரவு இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தேவையான உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்ல நேரலாம். அது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்கும். ஒப்பந்ததாரர், வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பெண்களுக்கு, எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த இடத்தில் இருந்து பண வரவு இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, மனம் வருந்தும்படியான சூழ்நிலை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள், உடன் பழகுபவர்களிடம் கவனமாக இருப்பது மிகவும் நன்மையைத் தரும்.

 பரிகாரம்: விநாயகப் பெருமானைத் தினமும் 21 முறை வலம் வர நன்மைகள் அதிகமாக நடக்கும். எண்கள்: 4, 7.  நிறங்கள்: நீலம், கருஞ்சிவப்பு.  திசைகள்: மேற்கு, வடமேற்கு.  அதிர்ஷ்டக் கிழமைகள்: சனி, ஞாயிறு. 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு அதிகமாக இருக்கும். உங்களை எதிர்த்துச் செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் பாக்கிகள் கை கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் குறித்த நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீரென மனவருத்தம் ஏற்படலாம், கவனம் தேவை. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். பெண்கள் மற்றவர்கள் நலனில் அக்கறையுடன் இருப்பீர்கள். கலைத் துறையினருக்கு, கூடுதல் முயற்சியால் வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, முக்கிய முடிவு எடுப்பதில் சிக்கல்கள் வரலாம். கவனம் தேவை. பணவரவு திருப்தி தரும். தொண்டர்களின் செயல்பாடுகள் நன்மையை விளைவிக்கும். மாணவர்களுக்கு, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். அனைவரின் அன்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.

 பரிகாரம்: தினமும் அனுமத்கவசத்தைச் சொல்லி வாருங்கள். எண்கள்: 6, 8, 9.  நிறங்கள்: கரும் பச்சை, கருநீலம்.  திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு.  அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி, சனி. 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம்  மனச்சோர்வு உண்டாகலாம். கவலையின்றி வேலையைத் தொடருங்கள். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில், வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். அரசாங்க காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு, புதிய வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தால் சாதகமான சூழ்நிலை ஏற்படும். திருமண முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல சாதகமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். கலைத் துறையினருக்கு, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு, படிப்பில் கவனம் தேவை. சக மாணவர்களின் வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

 பரிகாரம்: சிவாலயத்துக்குச் சென்று நமசிவாய மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். எண்கள்: 2, 5, 6.  நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு.  திசைகள்: வடக்கு, வடகிழக்கு.  அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close