[X] Close

இந்த வாரம் இப்படித்தான்! (ஜன 3 முதல் 9ம் தேதி வரை) மேஷம் முதல் கன்னி வரை


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 10:28 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து வெற்றி காண்பீர்கள். புத்தி சாதுரியமும் வாக்குவன்மையும் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய திருப்பங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையில்லாமல் அறிவுரை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு, எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். கலைத் துறையினருக்கு நல்ல மனிதரின் அறிமுகம் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போதும் வெளியூர்களுக்குச் செல்லும்போதும் கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகள் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முயல்வீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் தேர்ச்சி உண்டாகும். தேர்வுகள் சாதகமான  பலன் தரும்.

 பரிகாரம்: முருகனுக்கு கந்த சஷ்டி கவசம் படிக்க எல்லாப் பிரச்சினைகளும் தீரும். எண்கள்: 1, 3, 9.  நிறங்கள்: மஞ்சள், சிவப்பு. திசைகள்: மேற்கு, தெற்கு.  அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன். 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பாராத  செலவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். அலுவலகம் தொடர்பான பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு, கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும். கணவர் வழியில் ஆதரவு இருக்கும். கலைத் துறையினருக்கு, உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, மனம் நிம்மதியாக இருக்கும். எதிர்கால எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களுக்கு, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் படிப்புகள் உங்களுக்குக் கைகொடுக்கும்.

 பரிகாரம்: மகாலட்சுமியைத் தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும்.  எண்கள்: 2, 5, 6.  நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.  திசைகள்: மேற்கு, தென்கிழக்கு.  அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி. 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்மீதான நம்பிக்கை மேலோங்கும். அனைவருக்கும் உதவுவீர்கள். உறவினர்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள். மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்தியைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் வெளியூர்ப் பயணம் செல்ல நேரலாம். அதனால் உங்களுக்கு நன்மையே நடக்கும். பெண்களுக்கு, உற்சாகமாகக் காணப்படுவீர்கள். குடும்பத்தினரிடம் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்கும். கலைத் துறையினருக்கு வேலையில் தொய்வு ஏற்படலாம் . எனவே, கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் அறிமுகம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். மாணவர்கள் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. சக மாணவர்களின் உதவி கிடைக்கும்.

 பரிகாரம்: பெருமாள் கோயிலுக்குச் சென்று அவல் படையுங்கள். எண்கள்: 2, 4.  நிறங்கள்: பச்சை, வெள்ளை.  திசைகள்: வடக்கு, கிழக்கு.  அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன், சனி. 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் வெற்றி உண்டாகும். எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் நல்லபடியாக நடக்கும். வேலை தேடுபவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வரும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். பெண்களுக்கு, எந்த ஒரு விவகாரத்தையும் எதிர்கொள்ளும் மனவலிமை உண்டாகும். உறவினர்களால் நன்மை உண்டாகும். கலைத் துறையினருக்கு, முன்னேற்றம் எதிர்பார்த்த அளவு இருக்காது. மனத்தைத் தளரவிட வேண்டாம். முன்னேற்றப் பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, மேடைப் பேச்சுகளில் கவனம் தேவை. மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆசிரியர்களிடம் பாராட்டுப் பெறுவீர்கள்.

 பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்பாளுக்கு வெள்ளை நிறப் பூவில் அர்ச்சனை செய்யுங்கள். எண்கள்: 3, 5.  நிறங்கள்: வெண்மை, நீலம்.  திசைகள்: தெற்கு, கிழக்கு.  அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன். 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பாராத காரியங்கள் நடந்தேற வாய்ப்புண்டு. வெற்றியால் மனம் மகிழ்ச்ச்சியில் திளைக்கும். கடந்த காலத்தில் இருந்த துன்பங்கள் சட்டென்று விலகும். முயற்சிகள் நல்ல பலன்களைத் தரலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு, இழுபறியாக இருந்த பிரச்சினைகள் சாதகமான முடிவுகளைத் தரும். கலைத் துறையினருக்கு, சில நட்பு வட்டாரங்களால் தொல்லைகள் வரலாம். அரசியல்வாதிகளுக்கு, தெளிவான சிந்தனையும் வெற்றிக்கான வழிகளும் தெரிய வரும். மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாகப் படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறையும்.

 பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.   எண்கள்: 1, 7.  நிறங்கள்: சிவப்பு, பிரவுன்.  திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.  அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள். 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த விஷயங்கள் சற்றுத் தாமதமாக ஏற்பட்டாலும் முடிவில் சாதகமாக முடியும். துணிச்சலுடன் எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த நன்மையை விடக் கூடுதலாக நன்மையான செய்திகள் வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வங்கிக் கடன்களும் ஏற்பாடாகும். குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பெண்களுக்கு, செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் கவுரவம் உயரும். கலைத் துறையினருக்கு, எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். அரசியல்வாதிகளுக்கு, கட்சியில் புதிய பதவிகள்,  மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் ஏற்படும். மாணவர்களுக்கு, அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியருடன் கலந்துகொள்வது நல்லது.

 பரிகாரம்: புதன்கிழமை நாராயணீயம் சொல்லி வாருங்கள்.  எண்கள்: 1, 5.  நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு.  திசைகள்: வடமேற்கு, கிழக்கு.  அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன். 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close