[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 09:36 am
  • அ+ அ-

மேஷம்: சகோதரர்களுடன் எதிர்பாராத வகையில் மனவருத்தம் வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும். மின் சாதனங்கள் பழுதாகும். அக்கம்பக்கத்தினருடன் அளவோடு பழகுங்கள்.

ரிஷபம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். புதுத் தெம்பு பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்: வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தந்தைவழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு சமூகத்தில் பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.

சிம்மம்: உங்களிடம் இருக்கும் சோர்வு, களைப்பு நீங்கும். புது முயற்சிகளில் உற்சாகமாக இறங்குவீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும். பயணம் உண்டு.

கன்னி: தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள்.

துலாம்: மனக் குழப்பங்கள் நீங்கி, புத்துணர்ச்சியுடன் திகழ்வீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். இந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். ஊர் பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

தனுசு: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணம் ஏற்படும். புது வேலையில் சேருவீர்கள். விலகியிருந்த நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

மகரம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்களிடம் இருந்துவந்த பகை நீங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.

கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதரர்களின் உதவி கிடைக்கும். நிலம், வீடு வாங்குவது, விற்பது லாபம் தரும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close