[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 01 Jan, 2019 09:17 am
  • அ+ அ-

மேஷம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கடகம்: எதிர்பார்த்த காரியங்களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

தனுசு: குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். 

மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

மீனம்: பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கடன் வாங்க வேண்டியது வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்து விடாதீர்கள்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close