[X] Close

2019: பூராடம் நட்சத்திரத்துக்கான பலன்கள்


2019-perunkulam

2019 - பூராட நட்சத்திரத்துக்கான பலன்கள்

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 12:02 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கலைநயம் அதிகம் கொண்ட பூராட நட்சத்திர அன்பர்களே!

நீங்கள் தன்னம்பிக்கை கொண்டவர். இந்த புத்தாண்டில் பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதுர்யத்தால் எடுத்த காரியத்தைத் திறம்பட செய்து முடிப்பீர்கள்.  எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

அக்கம்பக்கத்தினரிடம் சின்னச்சின்ன சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி  கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பொருளாதார விபரங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தைச் சிதற விடாமல் படிப்பது அவசியம்.

+: எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்

-: அக்கம்பக்கத்தினரிடம் சின்னச்சின்ன சண்டை ஏற்படலாம்.

பரிகாரம்:  அம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சினைகள் தீரும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசியுங்கள். குங்கும அர்ச்சனை செய்யுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். முடியும்போது புடவை சார்த்துங்கள். மாவிளக்கேற்றி வழிபடுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். சுபிட்சம் நிலவும்.

மதிப்பெண்கள்: 62%

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close