[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 09:09 am
  • அ+ அ-

மேஷம்: உங்களிடம் மறைந்துகிடக்கும் திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். நல்ல சேதி தேடிவரும்.
**
ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான திருப்பம் வரும். உங்களால் சிலர் ஆதாயம் அடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
**
மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு பெருகும்.
**
கடகம்: நட்பு வட்டம் விரிவடையும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.
**
சிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள்.
**
கன்னி: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.
**
துலாம்: எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களை குறை கூறாதீர்கள். வீணாக மற்றவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். பணம், நகை விஷயத்தில் கறாராக இருங்கள்.
**
விருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.
**
தனுசு: சின்னச் சின்ன சந்தர்ப்பங்கள், வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும்.
**
மகரம்: நம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
**
கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
**
மீனம்: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டி இருக்கும். யாரும் உங்களை புரிந்துகொள்வது இல்லை என்று ஆதங்கப்படுவீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close