[X] Close

2019: ஹஸ்த நட்சத்திரத்துக்கான பலன்கள்!


2019-perunkulam

2019- ஹஸ்த நட்சத்திரத்துக்கான பலன்கள்

  • kamadenu
  • Posted: 30 Dec, 2018 15:06 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸியர்

பொழுதுபோக்கிற்கும் கேளிக்கைகளுக்கும் இடம் கொடுத்தாலும் செய்யும் வேலைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஹஸ்த நட்சத்திர அன்பர்களே!

இந்த புத்தாண்டில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனக்கஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோதைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.

பெண்களுக்கு  மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். கலைத்துறையினருக்கு புத்தி சாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தாங்கள் எடுக்கும் பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.

+: மன வலிமை அதிகமாகும். அரசாங்க ரீதியில் அனுகூலம் ஏற்படும்.

-: குடும்பத்தினரிடம் பேசும் போது கவனம் தேவை.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். முடியும்போதெல்லாம் அனுமருக்கு வெற்றிலை மாலையும் துளசி மாலையும் சார்த்துங்கள். வெண்ணெய்க் காப்பு செய்து வழிபடுங்கள். வெற்றி தேடி வரும்.

மதிப்பெண்கள்: 65%

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close