[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 30 Dec, 2018 10:28 am
  • அ+ அ-

மேஷம்: புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பணவரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். சிலர் தேடிவந்து உதவி கேட்பார்கள்.
**
ரிஷபம்: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். சாதுர்யமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
**
மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
**
கடகம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். தைரியமாக முடிவு எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
**
சிம்மம்: மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
**
கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்துகொள்வார்கள். பேச்சு, காரியத்தில் நிதானம் அவசியம்.
**
துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.
**
விருச்சிகம்: வெளியூர் உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். வீண் செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
**
தனுசு: உறவினர்கள் மத்தியில் கவுரவம் உயரும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள்.
**
மகரம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிந்தனைத் திறன், செயலாற்றல் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
**
கும்பம்: அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களை குறைகூறாதீர்கள். சாலையைக் கடக்கும்போது கவனம் தேவை. 
**
மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close