[X] Close

2019 : கார்த்திகை நட்சத்திரத்துக்கான பலன்கள்!


2019-perunkulam

2019 கிருத்திகை நட்சத்திரப் பலன்கள்

  • kamadenu
  • Posted: 30 Dec, 2018 09:55 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

வேகமான நடவடிக்கைகளால் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே!

இந்த ஆங்கிலப் புத்தாண்டில் எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரவு திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம்.  கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பெண்கள், எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும்.

கலைத்துறையினருக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

+: எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி

-: பணவரவில் அதிருப்தி

பரிகாரம்: பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபடுங்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்துங்கள். முடிந்தால், அருகில் உள்ள ஆலயத்தில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யுங்கள். குழப்பம் நீங்கும்.  மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சினை தீரும்.

மதிப்பெண்கள்: 78%

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close