[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


raasi-palan

  • kamadenu
  • Posted: 29 Dec, 2018 09:24 am
  • அ+ அ-

மேஷம்: தொழில் ரீதியாக சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும்.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல் தீரும்.

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். வீடு, வாகன வகையில் செலவு அதிகரிக்கும். அதிகாரிகள் உதவியுடன் சில காரியங்களை முடிப்பீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சிம்மம்: மனைவி வழியில் மதிப்பு கூடும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

கன்னி: பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். எந்த சூழலிலும் பொறுமையை இழக்காமல் இருங்கள். உறவினர், நண்பர்களின் பேச்சு, செயல்பாடு அதிருப்தி தரும்.

துலாம்: வெளி வட்டாரத்தில் அலைச்சல், செலவு அதிகரிக்கும். லேசாக தலைவலி வந்துபோகும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வீண் செலவு செய்ய வேண்டாம்.

விருச்சிகம்: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். முக்கிய நபரை சந்திப்பீர்கள். மற்றவருக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து சரிசெய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

கும்பம்: எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள்.

மீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புதிய நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close