[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 28 Dec, 2018 09:22 am
  • அ+ அ-

மேஷம்: உறவினர்கள், நண்பர்களுடன் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் கூடி வரும். வழக்கில் வெற்றியுண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும்.

கடகம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். கல்யாண முயற்சிகளும் நல்ல விதத்தில் முடியும்.

சிம்மம்: சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடும். புதிய வாய்ப்புகள் குறித்து நன்கு சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

கன்னி: சுபச்செலவுகள் வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நல்ல இடவசதி, காற்றோட்டமுடைய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: திடீர் பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சகோதரர் வகையில் உதவியுண்டு. ஊர்ப் பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

தனுசு: தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பால்ய சிநேகிதர்களை சந்திந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட்செலவு வரக்கூடும். வாகனம் பழுதாகும். அக்கம்பக்கத்தினருடன் அளவாகப் பழகுங்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

கும்பம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

மீனம்: மறைமுக எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாக வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறைந்து, ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வீர்கள்.

 

 

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close