[X] Close

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - சிம்மம்


2019-simmam

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 12:24 pm
  • அ+ அ-

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

அதிகாரத்திற்கு அடிபணியாதவர்களே! உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் இந்தப் ்புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.

12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ராசிக்கு 12-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப் போது மனம் கலங்குவீர்கள். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது 5-ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து் கொள்ளுங்கள்.

அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்சினை வெடிக்கும். ஆனால், ராகு 11-ம் வீட்டில் நீடிப்பதால் திடீர் பணவரவு உண்டு. வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். இந்தாண்டு முழுக்க சனி 5-ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை யின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் கொஞ்சம் தள்ளியிருங்கள். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். செவ்வாய் 8-ல் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் வரும். சொத்து விஷயங்களைச் சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள். இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமையால் எப்போதும் பதற்றத்துடன் காணப்படுவீர்கள். தாயாருடன் மோதல்கள் வரும். அவருக்கு மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

வீட்டைக் கூடுதல் செலவு செய்து சீர் செய்ய வேண்டி வரும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஆனால், 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாவதாலும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 5-ம் வீட்டிலேயே வந்தமர்வதாலும் மன இறுக்கங்கள் நீங்கும். பணப்பற்றாக்குறை அகலும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டிப் புகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும்.

பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

வியாபாரிகளே! முன்பு இருந்த போராட்டம், தடைகள் நீங்கி இப்போது மனநிறைவுடன் காணப் படுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். போட்டியாளர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாகச் செயல்படுவீர்கள். சொந்த இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள் தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களே! அதிகாரிகளால் பந்தாடப்பட்டீர்களே! செல்வாக்கு இருந்தும் நீங்கள் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்காமல் திண்டாடினீர்களே! மாற்றம் வரும். புதுச் சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு. மேலதிகாரியிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி நட்புறவாடுவீர்கள். உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலகச் சூட்சுமங்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணினி துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரும்.

இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை ஏமாற்றினாலும், மையப்பகுதியிலிருந்து உங்களை ஏற்றத்தில் உயர்த்திவிடுவதாக அமையும்.

சிதம்பரத்திலிருந்து 5கி.மீ தொலைவில் உள்ள வசப்புத்தூர் என்ற கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீகாசி விசாலாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாதரை பிரதோஷ நாளில் சென்று வில்வமாலை அணிவித்து வணங்குங்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close