[X] Close

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மிதுனம்


2019-midhunam

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 12:11 pm
  • அ+ அ-

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

விழுவதெல்லாம் எழுவதற்கே என்றெண்ணுபவர்களே! இந்த 2019-ம் வருடம் சந்திரன் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதி்கள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிகம் உழைப்பீர்கள். புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும் சமயோஜிதப் புத்தியாலும் பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்சினையில் ஒரு பகுதி தீரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து செயல்படத் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.

12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும் 8-ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் எதிலும் பிடிப்பற்ற போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும். சாதாரணமா்ன பேச்சு சண்டையில் முடியும்.

வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனத்தை வாட்டும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் அமர்வதால் எதிலும் பயம், படபடப்பு, ஒற்றைத் தலைவலி, செரிமானக் கோளாறு வந்து செல்லும். இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் குருபகவான் நிற்பதால் வேலைச்சுமை இருந்து் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.

பணப்பற்றாக்குறையைப் போக்கக் கூடுதலாக உழைப்பீர்கள். முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். ஆனால், 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாவதாலும் 28.10.2019 முதல் வருடம் முடியும்வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதாலும் உங்களிடம் மறைந்து் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.

அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள்  மனக்கசப்பு நீங்கும். மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்கியம் இல்லையென்று வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் சீராகும். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள்.

வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சொந்தபந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனிச் செயல்படுவீர்கள்.

திண்டுக்கல் மாவட்டம், கோட்டைப்பட்டி எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீசென்றாயப் பெருமானை சனிக்கிழமைகளில் சென்று துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். சுபிட்சம் உண்டாகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close