[X] Close

இந்த வாரம் இப்படித்தான்! (டிசம்பர் 27 முதல் ஜனவரி 2 வரை) (துலாம் முதல் மீனம் வரை)


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 11:20 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைப்பதற்கு வழிசெய்யும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியைத் தரும். பெண்களுக்கு, மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. கலைத் துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். அரசியல்வாதிகளுக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழிபட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்திக்கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும். தொழில்,வியாபார விஷயங்களில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் திறமையான பணிகளுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெறுவார்கள்.குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும்.

நல்லது, கெட்டதை அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு, எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்தபின் அதில் ஈடுபடுவது நல்லது. கலைத் துறையினருக்கு, பணிகளில் நெருக்கடி இருந்தாலும் நிறைவு இருக்கும். அரசியல்வாதிகளுக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மாணவர்களுக்கு எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்

எண்கள்: 2, 9

பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரிய தடை நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும்  தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இழுபறியான நிலை காணப்படும். வீண் அலைச்சல், எதிர்பாராத செலவு ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பணித்த வேலையைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும்.

கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்கள், உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். பெண்களுக்கு, தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு, கவனத் தடுமாற்றம் இல்லாமல் பாடங்களைப் படிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: நவக்கிரக குருவை வணங்கி வருவது மன அமைதியைத் தரும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். தொழில், வியாபாரம் வேகம்பிடிக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும்.உத்தியோகத்தில் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.  அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் குறையும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும்.

பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு, மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். கலைத் துறையினர் நன்மை, தீமை பற்றிய கவலையின்றி எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். மாணவர்களுக்கு, பாடங்கள் படிப்பது மகிழ்ச்சியை உண்டாக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்கியம் பெறும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் கவுரவப் பிரச்சினை உண்டாகும். நீங்கள் நல்லபடியாகப் பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதைத் தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கெடவும் வாய்ப்புண்டு.  சூரியன் சஞ்சாரம் பணவரவைத் தரும்.தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் முயற்சிக்குப் பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையைச் செய்வீர்கள்.

குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாக கிடைக்கும்.பெண்களுக்கு, அடுத்தவர் பேசுவதை எண்ணி வருத்தப்பட வேண்டாம். கலைத் துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு சக மாணவர்கள், நண்பர்களுடன் கூடுதல் பழக்கம் வேண்டாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 2, 6

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். ராசியில் செவ்வாய் சஞ்சாரம் இருப்பதால் அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாகப் பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.  உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன்  அனுசரித்துச் செல்ல வேண்டும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.விருந்தினர்கள் வரவு இருக்கும். பெண்களுக்கு, எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு, பழைய பகை மாறும். அரசியல்வாதிகள், எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன் திசைகள்: வடக்கு, வடமேற்கு நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 1, 3 பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close