[X] Close

இந்த வாரம் இப்படித்தான்! (டிசம்பர் 27 முதல் ஜனவரி 2 வரை) (மேஷம் முதல் கன்னி வரை)


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 11:07 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்திக்கூர்மையுடன் செயல்களைச் செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். மனத்துக்குப் பிடிக்காத இடத்துக்குச் சென்று வரவேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாகப் பயணங்கள் இருக்கும். வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சலைச் சந்திப்பார்கள்.குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

கணவன் மனைவிக்குள் தேவையற்ற வருத்தம் உண்டாகலாம்.மருத்துவச் செலவு ஏற்படலாம். பெண்களுக்கு, புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறன் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மாணவர்களுக்கு, சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கிக் பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்

எண்கள்: 5, 7, 8

பரிகாரம்: முருகனை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாளுக்குப் பிறகு ராசியை ராசிநாதன் சுக்கிரன் பார்ப்பதால் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரவு அதிகரிக்கும். செயல்திறன் மேலோங்கும். வீடு, வாகனம் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வியாபார வளர்ச்சிக்குப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிலுவைப் பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினருடன்ன் விருந்து நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவீர்கள். பெண்களுக்கு, எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும். கலைத் துறையினருக்கு போட்டிகளே இருக்காது. தடைபட்ட பண உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு, பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்

எண்கள்: 2, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரவு கூடும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரவு கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வியாபாரம், தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனைத் தரும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம்.

வாழ்க்கைத் துணையையும் குழந்தைகளையும் அனுசரித்துச் செல்ல வேண்டும்.குடும்பத்துக்காகக் கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பெண்களுக்கு, திட்டமிட்டுச் செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். கலைத் துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையைச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.  மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 3, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து பெருமாளை வணங்க பிரச்சினைகள் தீரும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை குரு பார்ப்பதால் அனைத்து பிரச்சினைகளும் அகலும். கடினமான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வாக்கு வன்மையால் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருவாய் இருக்கும். செல்வாக்குள்ள நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிகுள் சுமுகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காகக் கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு, பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை

எண்கள்: 2, 5

பரிகாரம்: சரஸ்வதி தேவியைப் பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் மனத்தில் தெளிவு உண்டாகும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். கடிதப் போக்குவரத்து அனுகூலமான பலனைத் தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடிதப் போக்குவரத்து மூலம் தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலத் திட்டங்களை வகுப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம்.

கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். பெண்களுக்கு, மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு உண்டாகும். கலைத் துறையினருக்கு, வெளியூர்ப் பயணத்தால் அலைச்சல் உண்டாகலாம். அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும்போது ஆலோசித்துச் செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையன்று சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்தி சாதுரியத்தைப் பயன்படுத்தி காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் உண்டாகும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சொல்படி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சிப்பார்கள். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார்கள்.

உறவினர் வருகை இருக்கும். அனுபவப்பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு, உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு எளிதில் முடியும் காரியம் கூடத் தாமதமாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்வாதிகளுக்கு மனதைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு, மனோ தைரியம் கூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: நரசிம்மரை வணங்க தைரியம் உண்டாகும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close