[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 09:00 am
  • அ+ அ-

மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீட்டுக்குத் தேவையான மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். அத்தியாவசியச் செலவுகளும் அடுத்தடுத்து வரும். சகோதரருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு மறையும். விருந்தினர் வருகை உண்டு.

கடகம்: பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.

சிம்மம்: அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல்நிலையும் அவ்வப்போது பாதிக்கக் கூடும். முன்கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். நீண்ட நாட்களாக விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: கடந்தகால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகை உண்டு.

தனுசு: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

மகரம்: ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து போகும். யோகா, தியானம் செய்வது மனதுக்கு நிம்மதியைத் தரும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

கும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்குத் தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மீனம்: தோற்றப் பொலிவு கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக்கூட சர்வசாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close