[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 26 Dec, 2018 09:08 am
  • அ+ அ-

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். பண வரவு உண்டு.

ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும்.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவும், சாதுர்யமும் வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். 

கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். ஊர்ப் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் தேடிவந்துப் பேசுவார்கள்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்ப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். பயணம் உண்டு.

விருச்சிகம்: சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வரும். வேலை விஷயத்தில் தடை, தாமதம் ஏற்படும்.

மகரம்: சாதுர்யமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். ஆடை ஆபரணங்கள், கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: சமயோசிதமாகச் செயல்பட்டு பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையைத் திருப்பித் தருவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: அறிஞர்கள், சான்றோர்களின் நட்பு கிடைக்கும். உங்களின் முயற்சிக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்பு கிடைக்கும். மேற்படிப்புக்கு விண்ணப்பிப்பீர்கள்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close