[X] Close

வெற்றி மேல் வெற்றி தருவார் விநாயகர் - இன்று சங்கடஹர சதுர்த்தி!


sangadahara-chadurthi

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Dec, 2018 09:47 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

இன்று சங்கடஹர சதுர்த்தி. இந்த சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், ஆனைமுகத்தானை தரிசனம் செய்யுங்கள். அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, அவருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். முடிந்தால் வெள்ளெருக்கு மாலை சார்த்தி தரிசியுங்கள்.

எடுத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றியாக்கித் தந்தருள்வார் பிள்ளையாரப்பன்.

மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி வரும். இது விநாயகர் வழிபாட்டுக்கு உரிய அற்புதமான நாள் என்கிறது புராணம். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி, சிவ வழிபாட்டுக்கு உரியது என்பது போல், சஷ்டியானது முருக வழிபாட்டுக்கு உகந்தது என்று கொண்டாடுவது போல், ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை மனதார வழிபடுவது போல், சங்கட ஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவார்கள் பக்தர்கள்.

இந்தநாளில், விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம்.

மாலையில், அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, விநாயகப் பெருமானைத் தரிசிப்பது நன்மை பயக்கும். நலம் அனைத்தும் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இதோ... இன்று சங்கடஹர சதுர்த்தி (25.12.18). விநாயகருக்கு கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் காரியம் அனைத்திலும் துணை நிற்பார்; செயல்கள் அனைத்தையும் வெற்றிமேல் வெற்றியைத் தந்தருள்வார் ஆனைமுகத்தான்!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close