[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 25 Dec, 2018 09:15 am
  • அ+ அ-

மேஷம்: வீடு மாற முயல்பவர்களுக்கு வீடு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

ரிஷபம்: தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

மிதுனம்: பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கடகம்: யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

சிம்மம்: பணம் வந்தாலும் செலவுகளும் அடுக்கடுக்காக இருக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன், உத்தரவாதக் கையொப்பமிட வேண்டாம். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

கன்னி: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பார்த்திருந்த இடத்தில் இருந்து பணம் வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

துலாம்: பதவிகள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான விசா கிடைக்கும். விலகியிருந்த பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

தனுசு: அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்காதீர்கள். வெகுதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நவீன கலைப்பொருட்கள், ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.. உறவினர் வீட்டு சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். 

கும்பம்: பிரச்சினைகள், சிக்கல்கள், உடல்நலக் குறைவுகள் என்று வந்தாலும் எதையும் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான தகவல் கிடைக்கும்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close