[X] Close

இன்று பரசுராமர் ஜயந்தி


parasuramar-jayanthi

பரசுராமர்

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Dec, 2018 09:13 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

கடவுளின் தேசம் என்று கேரளாவைச் சொல்லுவார்கள். அதே கேரளாவுக்கு இன்னொரு பெயரும் உண்டு. கேரள தேசத்தை, பரசுராம க்ஷேத்திரம் என்று போற்றுவோம். பரசுராமர், உருவாக்கிய தேசம் இது. ஐயப்ப சுவாமியை முதன்முதலாக அங்கே, அந்த சபரிபீடத்தில் பிரதிஷ்டை செய்ததே பரசுராமர் என விவரிக்கிறது சபரிமலை ஸ்தல புராணம்.

இன்று பரசுராமர் ஜயந்தித் திருநாள்.     

ஜமதக்னி ரேணுகா தம்பதிக்கு ஐந்து குழந்தைகள். அவர்களில் கடைசி மகன் பரசுராமர். இவரே பரந்தாமனின் அம்சம். அவர் சிவபெருமானிடம் தவமிருந்து கோடரியை  வரமாகப் பெற்றார். பரசு என்றால் கோடரி என்று அர்த்தம்! இதனால் அவருக்கு பரசுராமர் எனும் பெயர் வந்ததாகச் சொல்வர்.

  ரேணுகா அதிகாலை விழித்தெழுந்து கங்கையில் நீராடி, நீரில் விரலால் வட்டம் வரைவாள். நீர்க் குடமொன்று மேலே வரும். அதைக் கொண்டு வந்து, கணவரின் பூஜைக்கு வழங்குவாள். இப்படி தினமும் செய்து வந்தாள்.  ஒருநாள், நீரில் வட்டம் வரைய, அப்போது பறந்து சென்ற கந்தர்வன் ஒருவனின் அழகிய தோற்றம் நீரில் தெரிந்தது. அதைக் கண்டவள் லேசாக மதி மயங்கினாள்.  இதனால், நீர்க்குடம் வரவே இல்லை.

  இதை தன் தவ வலிமையால் அறிந்தார் ஜமதக்னி முனிவர். கடும் கோபம் கொண்டார். மகன்களை அழைத்து விவரம் சொல்லி, அவள் தலையை வெட்டித் தள்ளுங்கள் என்றார். முதல் நான்கு மகன்களும் பின்வாங்கினார்கள். ஆனால் பரசுராமனோ தந்தை சொல்லைத் தட்டாத தனயனாக, தன் கையில் இருந்த கோடரியால், அன்னை ரேணுகாவை வெட்டினான்.

 என்னதான் தந்தையும் குருவுமான ஜமதக்னி முனிவர் சொன்னதைச் செய்தாலும், அம்மாவையே இப்படி கொன்றுவிட்டோமே என கலங்கினான் பரசுராமன். வெட்டிய தலையையும் உடலையும் பொருத்தினால்  உயிர் பெற்று வருவாள் என வரம் அருளினார் ஜமதக்னி.

 தாயின் தலையைக் கண்டெடுத்தான். ஆனால் உடலைக் காணோம். நடுங்கிப் போனான். பிறகு வேறு வழியின்றி, அங்கே இருந்த வேறொரு உடலில் தலையைப் பொருத்தினான். அன்னை ரேணுகா உயிர் பெற்றெழுந்தாள். இனி அவள் காளி மாரி எனும் பெயருடன் வாழ்வாள் என வாழ்த்தினார். மகன் பரசுராமனும் சாப விமோசனம் பெற்றான்!

பரசுராமரை மனதார வணங்குவோம். வளமும் நலமும் பெறுவோம்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close