[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 08:40 am
  • அ+ அ-

மேஷம்: நினைத்த காரியத்தை முடித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள்.
**
ரிஷபம்: மனசாட்சிப்படி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். நட்பு வட்டம் விரிவடையும்.
**
மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். மாலை முதல் பிரச்சினைகள் விலகும். 
**
கடகம்: குடும்பத்தில் வீண் வாக்குவாதம் வந்துபோகும். திடீர் செலவு, பயணங்கள் இருந்தாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பேச்சில் நிதானம் தேவை.
**
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மரியாதை, அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சி பலிதமாகும். விட்டுக்கொடுத்து சில வேலையை முடிப்பீர்கள்.
**
கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம், முக்கிய பிரச்சினை குறித்து ஆலோசிப்பீர்கள்.
**
துலாம்: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடியும். வாகனத்தை சரிசெய்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும்.
**
விருச்சிகம்: பொறுத்திருந்து சில காரியங்களை முடிக்கப் பாருங்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை தேவை. தடை, தடங்கல், இடையூறுகள் மாலை முதல் விலகும்.  
**
தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். புதிய பொருட்கள் சேரும். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். மாலை முதல் எதிலும் எச்சரிக்கை தேவை.
**
மகரம்: வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
**
கும்பம்: நண்பர்கள், உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
**
மீனம்: பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close